''பிரேமலு'' இயக்குனரின் அடுத்த படத்தில் நிவின்பாலி, மமிதா பைஜு

இப்படத்தைத் தவிர, நிவின் பாலி, திகில் நகைச்சுவை படமான 'சர்வம் மாயா' மற்றும் 'பென்ஸ்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
திருவனந்தபுரம்,
''பிரேமலு'' இயக்குனர் கிரிஷ் இயக்கும் அடுத்த படத்திற்கு 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
''பிரேமலு'' மற்றும் ''கும்பலங்கி நைட்ஸ்'' போன்ற சூப்பர்ஹிட் மலையாளப் படங்களைத் தயாரித்த பாவனா ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்க உள்ளது. இந்த படத்தின் கதையை இயக்குனர் கிரிஷ் மற்றும் கிரண் ஜோசி ஆகியோர் எழுதியுள்ளனர்.
அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்ய விஷ்ணு விஜய் இசையமைக்கிறார். இப்படத்தைத் தவிர, நிவின் பாலி, அகில் சத்யன் இயக்கும் திகில் நகைச்சுவை படமான 'சர்வம் மாயா' மற்றும் 'பென்ஸ்' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
மறுபுறம் மமிதா பைஜு இப்படத்தைத் தவிர, பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், சூர்யாவுடன் ''சூர்யா 46'', சங்கீத் பிரதாப்புடன் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.






