"மோகன்ராஜ் மறைவுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது" - ஸ்டண்ட் யூனியன் தலைவர்

''வேட்டுவம்'' படப்பிடிப்பு தளத்தில் முழுமையான பாதுகாப்பு வசதி இருந்ததாக ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் உயிரிழந்த விவகாரத்தில், ''வேட்டுவம்'' படப்பிடிப்பு தளத்தில் முழுமையான பாதுகாப்பு வசதி இருந்ததாக ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சென்னை வடபழனியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அவர், சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் மறைவுக்கு யாரையும் குறை சொல்ல முடியாது என தெரிவித்தார்.
மேலும், படப்பிடிப்பு தளத்தில் ஆம்புலன்ஸ் இல்லை என்பது பொய்யான தகவல் என்றும் முறையான இன்சூரன்ஸ் வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
Related Tags :
Next Story






