ராம் சரண் இல்லை...'கில்' இயக்குனருடன் இணையப்போவது இந்த நடிகரா?


Not Ram Charan, but this Telugu actor might work with Kill director
x

விஜய் தேவரகொண்டா பாலிவுட்டில் நடித்த ’லிகர்’ படத்தை கரண் ஜோஹர் தயாரித்திருந்தார்.

ஐதராபாத்,

கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற 'கில்'படத்தை இயக்கிய நிகில் நாகேஷ் பட் அடுத்ததாக ராம் சரணை வைத்து புராண படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இயக்குனர் அதற்கு மறுப்பு தெரிவித்தார். இது, பல ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

இருப்பினும், தற்போது விஜய் தேவரகொண்டாவை இவர் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரண் ஜோஹர், சமீபத்தில் ஐதராபாத் சென்று விஜய் தேவரகொண்டாவை சந்தித்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பு விஜய் தேவரகொண்டா நடித்த பாலிவுட் படமான 'லிகர்'படத்தை கரண் ஜோஹர் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


1 More update

Next Story