''எதிர்பார்த்ததை விட பெரிய நட்சத்திரமாகிவிட்டார் '' - பிரபாஸ் குறித்து மனம் திறந்த நடிகை


Noted actress says she never imagined Prabhas would become such a huge star
x
தினத்தந்தி 20 Aug 2025 4:46 PM IST (Updated: 20 Aug 2025 4:49 PM IST)
t-max-icont-min-icon

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் பிரபாஸை பற்றி மனம் திறந்து பேசினார்.

சென்னை,

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், தெலுங்கில் ''சுந்தரகாண்டா'' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற 29 அன்று வெளியாக உள்ள நிலையில், புரமோஷனில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். ஒரு நேர்காணலில் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார், பிரபாஸை பற்றி மனம் திறந்து பேசினார்.

அவர் கூறுகையில், "பிரபாஸுடனான நட்பு இன்னும் அப்படியே உள்ளது. பிரபாஸ் இப்போது ஒரு பெரிய நட்சத்திரம். இருப்பினும், அவர் கொஞ்சம் கூட மாறவில்லை. ஈஸ்வரின் காலத்திலேயே அவர் ஒரு பெரிய நட்சத்திரமாக வருவார் என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். ஆனால், பிரபாஸ் நாங்கள் எதிர்பார்த்ததை விட பெரிய நட்சத்திரமாகிவிட்டார். இது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளியான ''ஈஸ்வர்'' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி விஜயகுமார். இப்படம்தான் ஸ்ரீதேவியின் தெலுங்கு அறிமுக படமாகும். அதேபோல், பிரபாஸ் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் இது என்றும் கூறப்படுகிறது.

1 More update

Next Story