''உஸ்தாத் பகத் சிங்''-ல் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல தமிழ் இயக்குனர்?


Noted Tamil Director to play a key role in Ustaad Bhagat Singh
x

பவன் கல்யாண் தற்போது 'உஸ்தாத் பகத் சிங்' படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

சென்னை,

'ஹரி ஹர வீர மல்லு' மற்றும் 'ஓஜி' படங்களின் படப்பிடிப்பை முடித்த பிறகு, பவன் கல்யாண் தற்போது 'உஸ்தாத் பகத் சிங்' படப்பிடிப்பை தொடங்கியுள்ளார். ஹரிஷ் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் ஸ்ரீலீலா நாயகியாக நடிக்க தேவி ஸ்ரீ இசையமைக்கிறார்.

''ஹரி ஹர வீர மல்லு'' படம் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் நிலையில், ''உஸ்தாத் பகத் சிங்'' சமூக ஊடகங்களில் பரபரப்பான விஷயமாக மாறி இருக்கிறது.

பவன் கல்யாணின் பிறந்தநாளன்று படத்தின் சிறப்பு டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. மேலும், ராசி கன்னா 2-வது பெண் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், தமிழ் இயக்குனரும் நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக மற்றொரு தகவல் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story