மறைக்க எதுவுமில்லை...வைரலாகும் சமந்தாவின் லேட்டஸ்ட் வீடியோ

சமந்தா டாட்டூவை நீக்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை,
நடிகை சமந்தா தனது முதுகில் போட்டிருந்த டாட்டூவை நீக்கி இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சமந்தாவின் முதுகில் 'யே மாய சேசாவே' (YMC) என்ற டாட்டூ போடப்பட்டிருந்தது.
இது அவரும் நாக சைதன்யாவும் நடித்திருந்த படமாகும். இந்த படத்தின்போது இருவருக்கும் இடையே காதல் மலர, அதன் ஞாபகமாக சமந்தா இந்த டாட்டூவை போட்டிருந்ததாக கூறப்படுகிறது.
பின் இவர்கள் இருவரும் பிரிந்து விவாகரத்து வாங்கியும் சமந்தா அந்த டாட்டூவை நீக்காமல் வைத்திருந்தார். தற்போது அந்த டாட்டூவை சமந்தா நீக்கி இருக்கும் வீடியோதான் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ' மறைக்க எதுவுமில்லை' என்று பதிவிட்டுள்ளார் சமந்தா.
Related Tags :
Next Story






