"தக் லைப்" படத்தின் "ஓ மாறா" வீடியோ பாடல் வெளியானது

கமல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் உருவான் ‘தக் லைப்’ படம் உலக அளவில் ரூ.98 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
Published on

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் கூட்டணியில் 38 வருடங்கள் இடைவெளிக்கு பிறகு உருவான படம் 'தக் லைப்'. இதில் சிம்பு, அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் கடந்த 5-ந் தேதி வெளியானது. கர்நாடகாவில் மட்டும் கமலின் பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்படம் வெளியாகவில்லை. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான தக் லைப் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இப்படம் உலக அளவில் ரூ.98 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், 'தக் லைப்' படத்தில் சிம்புவின் அறிமுக பாடலாக இடம்பெற்ற 'ஓ மாறா' பாடலின் வீடியோவை யூடியூபில் படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com