ஒரே நாளில் வெளியாகும் படங்கள் - பிரதீப் ரங்கநாதன் சொன்ன வார்த்தை


Only one of LIK & Dude for Diwali, clarifies Pradeep Ranganathan
x
தினத்தந்தி 29 Aug 2025 3:28 PM IST (Updated: 29 Aug 2025 3:31 PM IST)
t-max-icont-min-icon

பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக ''எல்ஐகே'' மற்றும் ''டியூட்'' ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

சென்னை,

தமிழ் சினிமாவில் இளம் நட்சத்திரமான பிரதீப் ரங்கநாதன், ''லவ் டுடே'' மற்றும் ''டிராகன்'' ஆகிய இரண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

அடுத்ததாக ''எல்ஐகே'' மற்றும் ''டியூட்'' ஆகிய இரண்டு படங்களில் நடித்திருக்கிறார். இதற்கிடையில், ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் இரண்டும் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இது ரசிகர்களை மட்டுமில்லாமல், பொது பார்வையாளர்களையும் ஆச்சரியப்படுத்தியது. இந்நிலையில், ​இது பற்றி பிரதீப் ரங்கநாதன் சொன்ன வார்ந்த்தை சஸ்பென்ஸை அதிகப்படுத்தி உள்ளது.

ஒரு விருது வழங்கும் விழாவில் அவர் பேசுகையில், "தீபாவளிக்கு எல்ஐகே'' அல்லது ''டியூட்'' ஆகிய 2 படங்களில் ஏதாவது ஒன்று மட்டுமே வரும். நாம் ஒன்றாக தீபாவளியை கொண்டாடுவோம்" என்றார்.

இரண்டு படங்களும் மோதப்போவதில்லை என்பதை பிரதீப் உறுதிப்படுத்திய போதிலும், இந்த தீபாவளிக்கு எந்த படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை அவர் கூறவில்லை. இதனால் சஸ்பென்ஸ் தொடர்கிறது.

''எல்ஐகே'' படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். அதே நேரம், ''டியூட்'' படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கி உள்ளார். அதேபோல், ''எல்ஐகே'' படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாகவும், ''டியூட்'' படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றனர்.

1 More update

Next Story