நடிகை ஷெபாலியை சூனியம் வைத்து கொன்று விட்டனர் - தெலுங்கு வில்லன் நடிகர்

நடிகை ஷெபாலி மரணம் குறித்து கணவர் பராக் கூறிய கருத்துக்கள் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையான ஷெபாலி ஜரிவாலா கடந்த ஆண்டு ஜூலை மாதம் திடீரென மரணம் அடைந்தார். அவரது மரணம் குறித்து கணவரும் பாலிவுட் மற்றும் தெலுங்கு திரை உலகில் பிரபல வில்லன் நடிகருமான பராக் தியாகி நடிகை ஷெபாலி மரணம் குறித்து பேட்டியில் கூறியுள்ளார். அதில் “கடவுள் எங்கிருந்தாலும் பிசாசும் அங்கு இருக்கிறது. மக்கள் சொந்த துன்பத்தை விட விட மற்றவர்களின் மகிழ்ச்சியையும் பார்த்து அதிக துன்பப்படுகிறார்கள். என் என் மனைவி ஷெபாலிக்கு யார் சூனியம் செய்தார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் என்னால் வெளியே சொல்ல முடியாது. எங்கள் மீது சூனியம் ஒரு முறை அல்ல 2 முறை செய்யப்பட்டது. ஒருமுறை நாங்கள் அதிலிருந்து தப்பித்து விட்டோம். 2-வது முறை இன்னும் கொஞ்சம் சீரியசாக செய்யப்பட்டது. என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.
ஷெபாலி மரணம் குறித்து கணவர் பராக் கூறிய கருத்துக்கள் திரை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பராக் தியாகி, அமிதாப்பச்சன், சல்மான்கான், பவன் கல்யாண், மகேஷ் பாபு உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.






