“பராசக்தி” படத்தின் “அடி அலையே” பாடலின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ வெளியீடு

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படம் வரும் ஜனவரி 14-ம் தேதி வெளியாக இருக்கிறது.
“பராசக்தி” படத்தின் “அடி அலையே” பாடலின் டான்ஸ் ரிகர்சல் வீடியோ வெளியீடு
Published on

சென்னை,

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடித்துள்ளார். இவருடன் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்திருக்கிறார். இப்படத்துக்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கிறார்.இப்படம் இந்தி திணிப்பை மையமாக கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, மதுரை, இலங்கை, பொள்ளாச்சியைத் தொடர்ந்து இறுதியாக சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பு முழுமையாக நிறைவு பெற்றுள்ளது.தற்போது இந்த படத்திற்கான பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. பராசக்தி படத்தின் ஆடியோ உரிமையை சரிகம சவுத் நிறுவனம் பெற்றுள்ளது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ந் தேதி 'பராசக்தி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

இதற்கிடையில் பராசக்தி படத்தில் இருந்து அடி அலையே எனும் பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாடலை ஷான் ரோல்டன், தீ ஆகிய இருவரும் இணைந்து பாடி இருந்த நிலையில் இப்பாடலுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீலீலா ஆகிய இருவரும் நடனமாடியிருந்தனர்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன்- ஸ்ரீலீலா ஆகிய இருவரும் இந்த பாடலுக்கு ரிகர்சல் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com