"உஸ்தாத் பகத் சிங்" படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவுசெய்த பவன் கல்யாண்

மைத்ரி மூவி மேக்கரஸ் தயாரிக்கும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தில் ஸ்ரீலீலா, ராஷி கண்ணா நடித்துள்ளனர்.
தெலுங்கின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் கடந்தாண்டு நடைபெற்ற ஆந்திர மாறில சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று பின் துணை முதல்வராகவும் பொறுப்பில் உள்ளார். தேர்தலுக்கு முன்னதாகவே அவர் நடிப்பில் 'ஹரிஹர வீர மல்தூ, ஓஜி, உஸ்தாத பகத்சிங்' ஆகிய படங்கள் படப்பிடிப்பில் இருந்தன
துணை முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு சில மாதங்களாக சினிமாவில் நடிப்பதை நிறுத்தி வைத்திருந்தார் பின்னர் தயாரிப்பாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு 'ஹரிஹர வீர மல்லூ', ஓஜி ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சமீபத்தில் ஹரிஹர வீர மல்லு படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
சில வாரங்களாக 'உஸ்தாத் பகத்சிங்' இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது மைத்ரி மூவி மேக்கரஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை ஹரிஷ் சங்கர் இயக்குகிறார் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பை கிளைமாக்ஸ் காட்சியுடன் பவன் கல்யாண அவரின் பிஸியான நேரத்திலும் நடித்து தந்து இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.






