பவன் கல்யாணின் "ஹரி ஹர வீரமல்லு" 2வது பாடல் வெளியானது
'ஹரி ஹர வீர மல்லு' படத்திற்காக நடிகர் பவன் கல்யாண் பாடிய 'கேட்கணும் குருவே' பாடல் வெளியாகி வைரலானது.
பவர் ஸ்டார் பவன் கல்யாண் அரசியல்வாதியும், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரும் ஆவார். 'அக்கட அம்மாயி இக்கட அப்பா' என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவர் நடித்த படங்கள் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தன.
இவர் தற்போது ஹரி ஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கி உள்ள இந்த படத்திற்கு கீரவாணி இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் நாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழியில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 'கேட்கணும் குருவே' என்று தொடங்கும் முதல் பாடலை நடிகர் பவன் கல்யாண் பாடியிருந்தார். பவன் கல்யாண் பாடிய பாடலின் படப்பிடிப்பு வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில், 'ஹரி ஹர வீர மல்லு' படத்தின் 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'என்மனச பறிச்சிட்டா' என தொடங்கும் பாடலை பா.விஜய் வரிகளில் ராகுல் மற்றும் யாமினி பாடியுள்ளனர்.