’மிகவும் திறமையான நடிகை’ - சாய் பல்லவியை பாராட்டிய தேசிய விருது பெற்ற நடிகர்

சாய் பல்லவியின் செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Photo Moment: Anupam Kher and Sai Pallavi Click a Sweet Selfie at IFFI
Published on

சென்னை,

56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது, இதில் பல பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்நிலையில், அனுபம் கெர் மற்றும் சாய் பல்லவியின் செல்பி புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேசிய விருது பெற்ற நடிகர் அனுபம் கெர், சர்வதேச திரைப்பட விழா நிகழ்வில் சாய் பல்லவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதனை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து, சாய்பல்லவி பற்றி சின்ன பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில், விழாவில் சாய் பல்லவியைச் சந்தித்ததில் நான் மகிழ்ச்சியடைந்தேன். அவர் உண்மையானவர், பாசமுள்ளவர், மற்றும் மரியாதைக்குரியவர். அவர் மிகவும் திறமையான நடிகை. அவரது வரவிருக்கும் அனைத்து படங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்! ஜெய் ஹோ! என்று தெரிவித்திருக்கிறார்.

நடிகை சாய் பல்லவி தற்போது ராமாயணம் படத்தில் சீதையாக நடித்து வருகிறார். மறுபுறம், அனுபம் கெர் பிரபாஸின் பவுஜியில் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com