ஜாக்கி சானை சந்தித்த ஹிருத்திக் ரோஷன்

அவருடன் எடுத்த புகைப்படத்தை ஹிருத்திக் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
கலிபோர்னியா,
கலிபோர்னியாவில் நடிகர் ஜாக்கி சானை ஹிருத்திக் ரோஷன் சந்தித்துள்ளார். அவருடன் எடுத்த புகைப்படத்தை ஹிருத்திக் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் அதிகமான லைக்குகளுடன் வேகமாக வைரலாகி வருகின்றன. இந்த இரண்டு நட்சத்திரங்களும் இதற்கு முன்பும் சந்தித்துள்ளனர்.
சீனாவில் நடந்த காபில் பிரீமியர் (2019) மற்றும் ரெட் சீ சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் இருவரும் சந்தித்திருக்கிறார்கள்.
ஹிருத்திக் ரோஷன் கடைசியாக வார் 2 படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் ஏமாற்றத்தை கொடுத்த இப்படம் தற்போது ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Related Tags :
Next Story






