அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலானது- நடிகை பார்வதி நாயர்


அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது மிகவும் சவாலானது- நடிகை பார்வதி நாயர்
x

நடிகை பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள "உன் பார்வையில்" என்ற படம் வருகிற 19-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

சென்னை,

கடந்த 2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான "பாப்பின்ஸ்" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பார்வதி நாயர். அதனைத்தொடர்ந்து, தமிழில் "உத்தம வில்லன், எங்கிட்ட மோதாதே, நிமிர், சீதக்காதி, என்னை அறிந்தால், தி கோட்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பாலிவுட் சினிமாவிலும் அறிமுகமாகியும் உள்ளார்.

இதற்கிடையில், பார்வதி நாயர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "உன் பார்வையில்". இப்படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 19-ந் தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாகும் இந்த படம் கணவர் மற்றும் இரட்டை சகோதரியின் மர்மமான திடீர் மரணங்களை தொடர்ந்து உண்மையை தேடும் பார்வதியின் பயணம் ரகசியங்களுடன் மர்ம உலகிற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது. படத்தில் பார்வையற்ற பெண்ணாக அழுத்தமிகு உணர்வுபூர்வமான கதாபாத்திரத்தில் பார்வதி நாயர் நடித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:- “பார்வையற்ற பெண்ணாக நடிப்பது சவாலானதும், அதே நேரத்தில் மிகவும் நெகிழ்ச்சியான அனுபவமாகவும் இருந்தது. டிசம்பர் 19 அன்று ‘உன் பார்வையில்’ படத்தை நேரடியாக நீங்கள் அனைவரும் பார்த்து மகிழ்வதைக் காண, ஆவலுடன் காத்திருக்கிறேன்” என கூறினார்.

1 More update

Next Story