"கூலி" படத்தின் "மோனிகா" பாடல் படப்பிடிப்பு காட்சிகளை பகிர்ந்த பூஜா ஹெக்டே


கூலி படத்தின்  மோனிகா பாடல்  படப்பிடிப்பு காட்சிகளை பகிர்ந்த பூஜா ஹெக்டே
x
தினத்தந்தி 17 July 2025 4:57 PM IST (Updated: 30 July 2025 12:23 PM IST)
t-max-icont-min-icon

ரஜினியின் 'கூலி' படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

ரஜினிகாந்த் நடிக்கும் 'கூலி' படத்தின் இரண்டாவது பாடலான 'மோனிகா' வெளியாகி உள்ளது. பூஜா ஹெக்டே நடனமாடி உள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். இதில், பூஜாவுடன் சவுபின் ஷாஹிர் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் நடனமாடி இருக்கிறார்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, உபேந்திரா உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். அமீர் கான் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதே நேரத்தில் ரெபா மோனிகா ஜானும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிகிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இருந்து வெளியான மோனிகா லிரிக்கல் வீடியோ சமீபத்தில் வெளியாகி யூடியூப்பில் மட்டுமே 1.6 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்நிலையில் 'கூலி' படத்தின் 'மோனிகா' பாடல் படப்பிடிப்பு காட்சிகளை நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராலில் பகிர்ந்துள்ளார். அதில் "மோனிகா பாடலுக்காக ரசிகர்களின் அன்புக்கு நன்றி. மோனிகா பாடல் என்னுடைய சினிமா வாழ்க்கையில் உடல் ரீதியாக மிகவும் கடினமான பாடலாகும். அதீத வெப்பம், சூரியன் சுட்டெரித்தால் தோளில் பழுப்பு நிற வரிகள் பல மாதங்களுக்கு இருக்கும்... இதையெல்லாம் எதிர்த்து இந்தப் பாடலுக்கு நடனமாடினேன். ஈரப்பதம், புழுதி, கொப்புளங்கள், வேகமான நடன அசைவுகள் இருந்தன. இவைகளுக்கு மத்தியில், கிளாமராகவும் கஷ்டப்படாமலும் ஆடியாக வேண்டும். நான் என்னுடைய அனைத்து முயற்சிகளையும் மோனிகா பாடலுக்காகக் கொடுத்திருக்கிறேன். திரையில் பார்க்கும்போது நிச்சயமாக சரவெடியாக இருக்குமென நான் உறுதியளிக்கிறேன். என்னுடன் நடனமாடிய துணை நடனக் கலைஞர்கள் எனக்கு உற்சாகம் அளித்தார்கள். குறிப்பாக மகாசிவராத்திரி அன்று நான் விரதம் இருந்த சமயத்தில் ஊக்கமளித்தார்கள். நீங்கள் அனைவருமே அற்புதமானவர்கள்" என மோனிகா பாடலுக்காக தான் பட்ட கஷ்டங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

1 More update

Next Story