'நான் 'ரெட்ரோ'வில் நடிக்க இதுதான் காரணம்'- பூஜா ஹெக்டே


Pooja Hegde was cast in Retro because of Radhe Shyam
x
தினத்தந்தி 5 Feb 2025 3:42 PM IST (Updated: 5 Feb 2025 4:05 PM IST)
t-max-icont-min-icon

'ரெட்ரோ' படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் 'முகமூடி' படம் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் விஜய்க்கு ஜோடியாக 'பீஸ்ட்' படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக 'ரெட்ரோ' படத்திலும், ஷாஹித் கபூருடன் தேவா படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இதில், தேவா படம் கடந்த மாதம் 31-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மறுபுறம் சூர்யாவுடன் நடித்துள்ள 'ரெட்ரோ' படம் வருகிற மே மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், ரெட்ரோ படத்திற்கு தேர்வானதற்கு 'ராதே ஷ்யாம்' படம்தான் காரணம் என்று நடிகை பூஜா ஹெக்டே கூறியுள்ளார்.

அதன்படி, ராதே ஷ்யாமில் தனது நடிப்பு கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு பிடித்திருந்த காரணத்தால் 'ரெட்ரோ'படத்திற்கு தேர்ந்தெடுத்ததாக பூஜா கூறி இருக்கிறார். பூஜா ஹெக்டே தற்போது விஜய்யுடன் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது.


Next Story