பிரபாஸ் பிறந்தநாளையொட்டி புதிய படத்தின் டைட்டில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு

‘சீதா ராமம்’ பட இயக்குநர்- பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரபாஸ் ‘பாகுபலி’ படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக கொண்டாடப்படுகிறார்.’ராதே ஷ்யாம்’, ‘ஆதிபுருஷ்’, ‘சலார்’ எனத் தொடர்ந்து இவர் நடித்த பான் இந்திய படங்கள் பெரிதாக வரவேற்புப் பெறவில்லை. இப்போது பான் வேர்ல்ட் படமாக உருவாகி வரும் ‘கல்கி 2898 ஏடி’ 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். பிரபாஸ் நடிப்பில் அடுத்து திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் ‘தி ராஜா சாப்’. இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10-ம் தேதி வெளியாக உள்ளது.
பிரபாஸ் அடுத்து, சீதா ராமம் பட இயக்குனர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் கீழ் நவீன் யெர்னேனி மற்றும் ரவி ஷங்கர் இந்த பிரமாண்டமான படத்தைத் தயாரிக்கிறார்கள். சமூக ஊடக பிரபலம் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.
இப்படம் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகாத நிலையில், பிரபாஸ் பிறந்தநாளையொட்டி படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ‘பௌஜி’என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. டைட்டில் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு ‘தி ராஜா சாப்’ படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.






