பிரபாஸின் "தி ராஜா சாப்" டீசர் நாளை வெளியீடு


பிரபாஸின் தி ராஜா சாப் டீசர் நாளை வெளியீடு
x
தினத்தந்தி 15 Jun 2025 8:05 AM IST (Updated: 14 Aug 2025 10:59 AM IST)
t-max-icont-min-icon

மாருதி இயக்கியுள்ள ‘தி ராஜா சாப்’ படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது.

சென்னை,

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் பிரபாஸ். இவரது நடிப்பில் சமீபத்தில் 'கல்கி 2898 ஏடி' படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலை வாரி குவித்தது. அதனை அடுத்து தற்போது, மாருதி இயக்கத்தில் ஹாரர் காமெடி கதைக்களத்தில் உருவாகும் 'தி ராஜா சாப்' படத்தில் நடித்து வருகிறார்.

பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தினை தயாரிக்கிறது. இப்படத்தில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்து வருகிறார்.

காமெடி கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்தநிலையில் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் நாளை காலை 10:52 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story