'பிரபாஸின் கதாபாத்திரம் சிறியது, ஆனால் முக்கியமானது' - 'கண்ணப்பா' பட நடிகர்


Prabhas’s role is concise, yet significant: Vishnu Manchu
x

’கண்ணப்பா’ திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி வெளியாகவுள்ளது.

சென்னை,

வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி உருவாகி இருக்கும் படம் 'கண்ணப்பா' . இதில், விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்சய் குமார், மோகன்லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் வரும் ஜூன் மாதம் 27ம் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது. இதற்கிடையில், 'கண்ணப்பா' படத்தின் முக்கியமான கிராபிக்ஸ் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிரைவ் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு மஞ்சு, பிரபாஸின் கதாபாத்திரம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, எடிட்டிங்கின்போது பிரபாஸின் சில காட்சிகள் குறைக்கப்பட்டதாகவும், இருந்தாலும் அவரது கதாபாத்திரம் முக்கியமானது எனவும் கூறியுள்ளார். மேலும், படத்தில் அவர் சுமார் 30 நிமிடங்கள் திரையில் தோன்றுவார் என்றும் தெரிவித்தார்.

1 More update

Next Story