“பிளடி ரோமியோ” படத்தில் நானி உடன் இணையும் பிருத்விராஜ்

நானி நடிக்கவுள்ள ‘பிளடி ரோமியோ’ படத்தில் பிருத்விராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
நானி நடிப்பில் இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் 2023ம் ஆண்டு வெளிவந்த படம் ‘தசரா’. தசரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி மீண்டும் அவரது 33- வது படமான ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எஸ்.எல்.வி. சினிமாஸ் தயாரிக்கிறது. தசரா படத்தை போலவே நானி இதிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்து வரும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மார்ச் 26ம் தேதி வெளியாகிறது.
சுஜித் இயக்கத்தில் வெளியான ‘ஓஜி’ படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து நானி படத்தினை இயக்கவுள்ளார் சுஜித். இதனால் இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. நானி - சுஜித் கூட்டணியில் உருவாகும் படத்துக்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார் தமன். இப்படத்திற்கு
‘பிளடி ரோமியோ’ டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நானி உடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிருத்விராஜ் ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தின் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.






