’ஹைவான்’ படப்பிடிப்பு தளத்தில்...பிரியதர்ஷன் பகிர்ந்த புகைப்படம் - வைரல்


’ஹைவான்’  படப்பிடிப்பு தளத்தில்...பிரியதர்ஷன் பகிர்ந்த புகைப்படம் - வைரல்
x
தினத்தந்தி 16 Nov 2025 6:43 PM IST (Updated: 8 Dec 2025 10:59 AM IST)
t-max-icont-min-icon

இந்தப் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை,

பிரியதர்ஷன் , சயிப் அலி கான் மற்றும் அக்‌சய் குமார் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் ஹைவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் 2016 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ' ஒப்பம்' படத்தை அடிப்படையாகக் கொண்டது .

இந்நிலையில் பிரியதர்ஷன், சயிப் அலி கான் மற்றும் மோகன்லாலுடன் ’ஹைவான்’ படப்பிடிப்பு தளங்களில் இருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். " இதோ, ஹைவான் படப்பிடிப்பு தளத்தில் , எனது மிகப்பெரிய கிரிக்கெட் ஹீரோக்களில் ஒருவரின் மகனும் எனக்குப் பிடித்த திரைப்பட ஐகானும்’ எனவும் பதிவிட்டுள்ளார்.

பிரியதர்ஷன், சயிப்பையும், மோகன்லாலையும் குறிப்பிட்டார். சயிப்பின் தந்தை டைகர் பட்டோடி ஒரு புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் பேட்ஸ்மேனுமானவர்.

கே.வி.என் புரொடக்சன்ஸ் வெங்கட் கே நாராயணா மற்றும் ஷைலாஜா தேசாய் பென்னின் தெஸ்பியன் பிலிம்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில், சயாமி கெர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அடுத்த ஆண்டு வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

1 More update

Next Story