''ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்'' படப்பிடிப்பில் நடந்த விபத்து - மனம் திறந்த பிரியங்கா சோப்ரா


Priyanka Chopra Jonas On Losing A Chunk Of Her Eyebrow While Filming Heads Of State
x
தினத்தந்தி 21 Jun 2025 9:03 AM IST (Updated: 21 Jun 2025 9:06 AM IST)
t-max-icont-min-icon

ஒரு ஆக்சன் காட்சியில் நடித்தபோது தனது புருவத்தின் ஒரு பகுதியை இழந்ததாக பிரியங்கா கூறினார்.

சென்னை,

''ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்'' படப்பிடிப்பில் நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை நடிகை பிரியங்கா சோப்ரா நினைவு கூர்ந்தார். ஒரு ஆக்சன் காட்சியில் நடிக்கும்போது தனது புருவத்தின் ஒரு பகுதியை இழந்ததாக கூறினார்.

வருகிற ஜூலை 2-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ள ஆக்ஷன் படமான ''ஹெட்ஸ் ஆப் ஸ்டேட்'' படத்தில் பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பிரியங்கா, ஹெட்ஸ் ஆப் ஸ்டேட் படத்தில் ஒரு ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது தான் சந்தித்த விபத்து பற்றி மனம் திறந்து பேசினார்.

அவர் கூறுகையில், " ஒரு காட்சியில் மழையில் நான் தரையில் உருண்டு விழ வேண்டும். அப்போது கேமிரா என் அருகில் வர வேண்டும். கேமரா ஆபரேட்டர் கொஞ்சம் கொஞ்சமாக அருகில் அதை கொண்டு வந்தார். நான் கொஞ்சம் அருகில் சென்றேன். அப்போது அந்த கேமிரா என் புருவத்தில் முட்டியது. இதில், புருவத்தில் ஒரு பகுதியை இழந்தேன். '' என்றார்.

1 More update

Next Story