மீண்டும் இணையும் நானி-பிரியங்கா மோகன்?

நானி மற்றும் பிரியங்கா மோகன் மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை,
’ஓஜி’ இயக்குனர் சுஜீத்தின் அடுத்த படத்தில் நானி மற்றும் பிரியங்கா மோகன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
முன்னதாக சூர்யாவின் சனிக்கிழமை படத்தில் இருவரும் நடித்திருந்தநிலையில், தற்போது சுஜித் இயக்கும் படத்தில் நானிக்கு ஜோடியாக பிரியங்கா மீண்டும் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாக திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இந்த திரைப்படத்தில் நானி புதிய அவதாரத்தில் தோன்றுகிறார்.
'ஓஜி' மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய சுஜீத், அடுத்து 'நானி' படத்தை இயக்க உள்ளதால் இப்படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story






