கெரியரில் முதல் முறையாக அதை செய்த ராசி கன்னா

தெலுசு கடா படத்தின் புரமோஷனின்போது ராசி கன்னா, உஸ்தாத் பகத் சிங் பற்றி மனம் திறந்து பேசினார்.
சென்னை,
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத் சிங் தெலுங்கில் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படத்தில் இளம் நடிகைகள் ராஷி கன்னா மற்றும் ஸ்ரீலீலா நடிக்கின்றனர். ஹரிஷ் சங்கர் இயக்கும் இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் வெளியான தெலுசு கடா படத்தின் புரமோஷனின்போது ராசி கன்னா, உஸ்தாத் பகத் சிங் பற்றி மனம் திறந்து ஒரு அற்புதமான அப்டேட்டை பகிர்ந்தார். அவர் தனது சினிமா கெரியரில் முதல் முறையாக, ஸ்கிரிப்டைக் கேட்காமலேயே உஸ்தாத் பகத் சிங்குக்கு ஓகே சொன்னதாக கூறினார்.
பவன் கல்யாணிடன் நடிக்க தான் எப்போதும் விரும்புவதாகவும், ஹரிஷ் சங்கர் உஸ்தாத் பகத் சிங் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் கூறினார். கெரியரில் முதல் முறையாக ஸ்கிரிப்டைக் கேட்காமலேயே ஓகே சொன்னதாகவும் கூறினார்.






