'அந்த மாதிரியான படங்கள் சங்கடத்தை கொடுக்கின்றன' - ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே, தமிழில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'கபாலி', 'வெற்றிச்செல்வன்', 'சித்திரம் பேசுதடி-2', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.
Radhika Apte sparks controversy with comments on graphic violence
Published on

சென்னை,

இந்திய சினிமாவில் வன்முறை போக்கு அதிகரித்து வருவது குறித்து சமீபத்தில் ராதிகா ஆப்தே கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஒரு பெண் குழந்தையின் தாயாகவும், தனது கணவரும் இசைக்கலைஞருமான பெனடிக்ட் டெய்லருடன் லண்டனில் வசித்து வரும் ராதிகா, வன்முறையை ஊக்குவிக்கும் படங்கள் தனக்கு சங்கடத்தை ஏற்படுத்துவதாக கூறினார்.

பலர் அவர் துரந்தர் திரைப்படத்தை மறைமுகமாக கூறியதாக இணையத்தில் கருத்து தெரிவிக்கின்றனர். இது மேலும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகா ஆப்தே, தமிழில் 'ஆல் இன் ஆல் அழகுராஜா', 'கபாலி', 'வெற்றிச்செல்வன்', 'சித்திரம் பேசுதடி-2', 'மெர்ரி கிறிஸ்துமஸ்' போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com