வீட்டில் கடவுள் படங்களுக்கு அருகில் ராஜமவுலியின் படம் வைத்திருக்கும் பிரபல இயக்குனர்


Rajamouli’s photo is next to the deities’ pictures at my home, says Thandel director
x

இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தண்டேல்

சென்னை,

பிரபல தெலுங்கு இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தண்டேல். நாக சைதன்யாவின் கெரியரில் அதிக பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம், வருகிற 7-ம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது படத்தின் புரமோசன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அப்போது இயக்குனர் சந்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதன்படி, இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் புகைப்படம் தனது வீட்டில் உள்ள தெய்வங்களின் படங்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


1 More update

Next Story