’அது நடக்கவில்லை என்றால் சினிமாவை விட்டு வெளியேறிவிடுவேன்’ - பிரபல நடிகர் அதிர்ச்சி கருத்து

மாஸ் ஜதாரா படத்தின் பிரமாண்ட பிரீ ரிலீஸ் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
ஐதராபாத்,
ரவி தேஜா -ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி இருக்கும் மாஸ் ஜதாரா திரைப்படம் வருகிற 31 ஆம் தேதி வெளியாக உள்ளது. பிரபல எழுத்தாளர் பானு போகவரபு இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதற்கிடையில், ஐதராபாத்தில் நேற்று இப்படத்தின் பிரமாண்ட பிரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. அதில் நடிகர் ராஜேந்திர பிரசாத் கலந்துகொண்டு அதிர்ச்சியான கருத்து ஒன்ரை கூறினார். அது இப்போது கவனத்தை ஈர்த்து வருகிறது. அவர் "மாஸ் ஜதாரா படத்தை பார்வையாளர்கள் விரும்பவில்லை என்றால் நான் இந்தத் துறையை விட்டு வெளியேறுவேன்," என கூறினார்.
தற்போது படங்களின் புரமோஷனின்போது நடிகர்கள் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் போர் சினிமாஸின் கீழ் நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு பீம்ஸ் செசிரோலியோ இசையமைத்திருக்கிறார்.






