ரஜினிகாந்திற்கு நடிப்பு கற்றுக்கொடுத்த ஆசிரியர் காலமானார்

ரஜினிகாந்த், திரைப்படப் பயிற்சி கல்லூரியில் படித்தபோது அங்கே அவருக்கு நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுத்த ஆசிரியர் கோபாலி இன்று காலமானார்.
ரஜினிகாந்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியது பாலச்சந்தர். ஆனால் ரஜினியை ஒரு நடிகராக மெருகேற்றியவர் கோபாலி. இவர் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பாக நடத்தப்பட்ட, திரைப்படப் பயிற்சி கல்லூரியில் ரஜினிகாந்த் படித்தபோது அங்கே நடிப்பு பயிற்சி கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக பணியாற்றினார்.
ரஜினிக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த ஆசிரியர் கோபாலி அவர் மீது கொண்ட அன்பு காரணமாக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் திரைப்பட பயிற்சிக் கல்லூரிக்கு வந்த போது அவரிடம் ரஜினிகாந்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறார் கோபாலி. அதன் பின்னர் தான் அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இதனால் கோபாலி மீது மிகுந்த மரியாதையும் மாறாத அன்பும் வைத்திருந்தார் ரஜினி. இந்தியன் எக்ஸ்பிரஸ், தூர்தர்ஷன் ஆகியவற்றில் திறம்பட பணியாற்றிய கோபாலி எண்ணற்ற திரைப்படங்களுக்கு விமர்சனமும் எழுதி இருக்கிறார்.
இந்நிலையில், வயது மூப்பு காரணமாக ரஜினிகாந்த் ஆசிரியர் கோபாலி இன்று காலை காலமானார். ரஜினிகாந்த் மாலை அணிவித்து இறுதிமதியாதை செலுத்தினார்.
கோபாலியின் மறைவுச் செய்தி பற்றி அறிந்த ரஜினி ரசிகர்கள், அவருக்கு சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






