புராணக்கதையில் ராம் சரண்...பிரபல பாலிவுட் இயக்குனருடன் பேச்சுவார்த்தை?


Ram Charan in talks with this Bollywood director for a mythological film
x

அடுத்ததாக புராணக்கதையில் ராம் சரண் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது

ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண் தனது 16-வது படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக ஆர்.சி 16 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார்.

ராம் சரணுடன் ஜான்விகபூர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இயக்குனர் புச்சி பாபு இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அடுத்ததாக புராணக்கதையில் ராம் சரண் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்காக பிரபல பாலிவுட் இயக்குனர் நிகில் நாகேஷ், ராம் சரணிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'கில்' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story