இயக்குநராவது பற்றி மனம் திறந்த ராம் பொதினேனி

தனது படத்திற்கு கதை எழுதத் தொடங்கியுள்ளதாக ராம் பொதினேனி கூறினார்.
சென்னை,
ராம் பொதினேனி தற்போது ஆந்திரா கிங் தாலுகா என்ற படத்தில் நடித்துள்ளார். பாக்யஸ்ரீ கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் நவம்பர் 28-ம் தேதி வெளியாகிறது.
சமீபத்தில், ஜகபதி பாபுவின் ஜெயம்மு நிச்சயமு ரா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராம் பொதினேனி கலந்து கொண்டார். அதில் அவரது ரசிகர்களுக்கு ஒரு அற்புதமான அப்டேட்டை பகிர்ந்தார்.
ராம் பொதினேனி தனது படத்திற்கு கதை எழுதத் தொடங்கியுள்ளதாகவும், விரைவில் இயக்குநராக திட்டம் உள்ளதாகவும் பகிர்ந்து கொண்டார். தனது நடிப்பு பயணத்தைத் தொடரும் அதே வேளையில், இயக்குநர் நாற்காலியில் அமரும் ராமின் வாழ்க்கையில் இது ஒரு புதிய சாப்டரை குறிக்கிறது.
Related Tags :
Next Story






