சன்னி தியோலின் 'ஜாத்' படத்தில் வில்லன் இவரா? - வைரலாகும் பர்ஸ்ட் லுக்

இப்படத்தில் வில்லனாக ரந்தீப் ஹுடா நடிக்கிறார்.
Randeep Hooda from the world of JAAT
Published on

மும்பை,

பிரபல தெலுங்கு இயக்குனர் கோபிசந்த் மலினேனி. இவர் பாலிவுட் நடிகர் சன்னி தியோலை வைத்து 'ஜாத்' படத்தை இயக்கி உள்ளார். கோபிசந்த் பாலிவுட்டில் இயக்கும் முதல் படம் இதுவாகும்.

இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, சயாமி கெர் மற்றும் ரந்தீப் ஹுடா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் பீப்பிள் மீடியா பேக்டரி இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது. இப்படத்தில் வில்லனாக ரந்தீப் ஹுடா நடிக்கிறார். இந்நிலையில்,  ரணதுங்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அவரின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com