ரன்வீர் சிங் ஜோடியாக நடிக்கும் "தெய்வத் திருமகள்" சாரா


ரன்வீர் சிங் ஜோடியாக  நடிக்கும் தெய்வத் திருமகள் சாரா
x
தினத்தந்தி 6 July 2025 4:10 PM IST (Updated: 6 July 2025 4:19 PM IST)
t-max-icont-min-icon

ரன்வீர் சிங் நடிக்கும் 'துரந்தர்' படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது

2011-ம் ஆண்டில் வெளியான 'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக 'நிலா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் சாரா அர்ஜுன். சாராவின் சுட்டித்தனத்திற்காகவும் அப்படத்திற்கு ரசிகர்கள் ஆனவர்கள் பலர். அதனைத்தொடர்ந்து விஜய் இயக்கத்தில் 'சைவம்' படத்தில் சாரா நடித்தார். 'பொன்னியின் செல்வன்-2' படத்தில் இளம் வயது நந்தினியாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் ரன்வீர் சிங் பிறந்தநாளையொட்டி, 'துரந்தர்' படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் பாகிஸ்தானுக்கு ரகசியமாகச் சென்று சாகசங்களில் ஈடுபடுபவராக வருகிறார் ரன்வீர். இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர். ஆதித்ய தார் இதனை இயக்கியிருக்கிறார். சாஸ்வத் சச்தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறார். 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங் இந்திய உளவாளியாக நடிக்கிறார். ரன்வீர் ஜோடியாக நடிக்கிற சாரா, அங்குள்ள அரசியல் கட்சித்தலைவரின் வாரிசாக வருகிறார்.

'துரந்தர்' படம் வரும் டிசம்பர் 5ம் தேதியன்று உலகம் முழுக்க வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

.

1 More update

Next Story