பிரபாஸுடன் பாக்ஸ் ஆபீஸில் மோதும் ரன்வீர் சிங்...வெற்றி யாருக்கு?


Ranveer Singh to clash with Prabhas at the box office...who will win?
x
தினத்தந்தி 7 July 2025 12:02 PM IST (Updated: 7 July 2025 12:34 PM IST)
t-max-icont-min-icon

ரன்வீர் சிங்கின் ஆக்சன் திரைப்படமான ''துரந்தர்'' டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திகில் நகைச்சுவை படமான தி ராஜா சாப், வருகிற டிசம்பர் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது. பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம் இந்தியிலும் நல்ல வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ரன்வீர் சிங்கின் ஆக்சன் திரைப்படமான ''துரந்தர்''-ம் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

நேற்று ரன்வீர் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது. ஆதித்யா தர் இயக்கி இருக்கும் துரந்தர் படத்தில் சாரா அர்ஜுன், சஞ்சய் தத், அக்சய் கன்னா, அர்ஜுன் ராம்பால் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

''தி ராஜா சாப்'' மற்றும் ''துரந்தர்'' படங்களில் எந்த படம் இந்தி பாக்ஸ் ஆபீஸில் வெற்றி பெறுகிறது என்று பொருத்திருந்து பார்ப்போம்.

1 More update

Next Story