தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ராப் பாடகர் வாகீசன்

இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜனனி நடிக்கிறார்.
சென்னை,
இலங்கையை சேர்ந்த ராப் பாடகர் வாகீசன் தனது பாடல்களின் மூலம் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமடைந்துள்ளார். இவரின் "மருதமோ எந்தன் காவியமோ", "ஜினுக்கு சிங்காரி" போன்ற பாடல்கள் வைரலாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், ராப் பாடகர் வாகீசன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் 'மைனர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாகீசன் அறிமுகமாகிறார். இப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜனனி நடிக்கிறார்.
இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றநிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






