மலைக்கா அரோராவுடன் நடனத்தில் கலக்கிய ராஷ்மிகா....வைரலாகும் "பாய்சன் பேபி" பாடல்


மலைக்கா அரோராவுடன் நடனத்தில் கலக்கிய ராஷ்மிகா....வைரலாகும் பாய்சன் பேபி பாடல்
x
தினத்தந்தி 14 Oct 2025 10:45 AM IST (Updated: 14 Oct 2025 10:45 AM IST)
t-max-icont-min-icon

இந்த பாடலில் மலைக்கா அரோராவுடன் ராஷ்மிகா மந்தனா நடனமாடி இருக்கிறார்

சென்னை,

பாலிவுட் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனது கவர்ச்சி நடனத்திற்கு பெயர் பெற்ற மலைக்கா அரோரா, தற்போது ஒரு புதிய பாடலில் தோன்றியுள்ளார். தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்தி படமான தம்மாவில் இருந்து வெளியாகியுள்ள "பாய்சன் பேபி" என்ற பாடலில் அவர் இடம்பெற்றுள்ளார்.

நேற்று வெளியான இந்த பாடலில் மலைக்கா அரோராவுடன் ராஷ்மிகா மந்தனாவும் நடனமாடி இருக்கிறார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது ‘தம்மா ’ படத்தில் நடித்துள்ளார். ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், நவாசுதீன் சித்திக் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரும் நடித்துள்ளனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி வெளியாக உள்ளது.

1 More update

Next Story