நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்...?


நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு ரகசியமாக நடந்த நிச்சயதார்த்தம்...?
x
தினத்தந்தி 8 Sept 2025 8:34 AM IST (Updated: 8 Sept 2025 8:39 AM IST)
t-max-icont-min-icon

துபாயில் சைமா விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது.

துபாய்,

துபாயில் நேற்று முன் தினம் சைமா விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு வந்த அவர் தனது கை விரலில் மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார். அந்த மோதிரம் நிச்சயதார்த்த மோதிரமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவும், நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது ராஷ்மிகா அணிந்துள்ள மோதிரம் இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நிறைவடைந்துவிட்டதா? என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

1 More update

Next Story