'குபேரா' அப்டேட் கேட்ட ரசிகருக்கு ராஷ்மிகா கொடுத்த பதில்


Rashmika Mandanna gives an update on Kubera
x

’குபேரா’ படம் ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.

மும்பை,

நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்து 3 ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். தற்போது அவர் சல்மான் கானுடன் 'சிக்கந்தர்' படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை திரைக்கு வருகிறது. இதுமட்டுமில்லாமல் தனுஷுக்கு ஜோடியாக குபேரா படத்திலும் ராஷ்மிகா நடித்து வருகிறார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியாகிறது.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'குபேரா' அப்டேட் கேட்ட ரசிகருக்கு ராஷ்மிகா பதிலளித்திருக்கிறார். அவர் அதில், 'எனக்கு தெரிந்ததெல்லாம் ஜூன் 20-ம் தேதி குபேரா ரிலீஸ் ஆகும் என்பது மட்டும்தான். இப்படம் வித்தியாசமானதாக இருக்கும் அதேவேளையில் மிகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்' என தெரிவித்திருக்கிறார்.

1 More update

Next Story