ராஷ்மிகா நடிக்கும் "தி கேர்ள்பிரண்ட்" படத்தின் அப்டேட்

ராஷ்மிகா நடிக்கும் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ராஷ்மிகா மந்தனா முன்னணி இடத்தில் இருப்பவர். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான குபேரா திரைப்படம் மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. திரைப்படம் வசூலில் 100 கோடியை கடந்து வெற்றி நடைப்போட்டு வருகிறது. அனிமல், புஷ்பா 2-க்குப் பிறகு, ராஷ்மிகா மந்தனா மீண்டும் ஒரு வெற்றி படத்தை குபேரா படம் மூலம்கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா அடுத்ததாக 'தி கேர்ள்பிரண்ட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராகுல் ரவிந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ரிலீஸ் தேதி மற்றும்பர்ஸ்ட் சிங்கிளை விரைவில் படக்குழு வெளியிட இருக்கிறது. படப்பிடிப்பு பணிகள் முழு வேகத்துடன் நடைப்பெற்று வருகிறது.
இப்படத்தில் தீக்ஷித் ஷெட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரபல இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப் இப்படத்தின் இசையை மேற்கொள்கிறார்.
அல்லு அரவிந்த் வழங்கும் இப்படத்தை தீரஜ் மற்றும் வித்யா இணைந்து தயாரித்துள்ளனர். ராகுல் ரவீந்திரன் இதற்கு முன் சி லா சோ மற்றும் மன்முதுடு 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.