நடிகர் ரவி மோகன் விவகாரம் - பாடகி கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு வைரல்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமண விழாவிற்கு பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவி மோகன் சென்றிருந்தார்.
சென்னை,
நடிகர் ரவிமோகன் மற்றும் ஆர்த்திக்கு கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதற்கிடையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி தன் மனைவியை பிரிவதாக ரவிமோகன் தெரிவித்தார். இவர்களது விவாகரத்து வழக்கு விசாரணை கோர்ட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
இதற்கிடையில், நடிகர் ரவிமோகன், தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் பிரீத்தியின் திருமண விழாவிற்கு பாடகி கெனிஷாவுடன் சென்றிருந்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக போய்க்கொண்டிருந்தநிலையில், ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த விவகாரம் சர்ச்சையாகி இருக்கும்நிலையில், கெனிஷா தனது இஸ்டாகிராம் ஸ்டோரியில் சில பதிவுகளை பகிர்ந்திருக்கிறார். அதில், 'ஒரு ஆண் கலவரமான உணர்ச்சிகளை கொண்ட பெண்ணிடம் ஈர்க்கப்பட மாட்டார். அவருக்கு அமைதி கொடுக்கும் பெண்ணிடமே அவரது இதயம் செல்லும். அந்த பெண்ணின் கனிவு என்பது ஒரு பாவனையாக இருக்காது. அது ஒரு பெரிய சக்தியாக இருக்கும். அப்படி இருக்கையில் இருவரும் அவரவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்' என்று தெரிவித்திருக்கிறார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.






