கலையரசன் நடித்துள்ள "டைட்டானிக்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அறிமுக இயக்குனர் ஜானகி ராமன் இயக்கத்தில் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள "டைட்டானிக்" படம் வெளியாக உள்ளது.
கலையரசன் நடித்துள்ள "டைட்டானிக்" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சென்னை,

'மெட்ராஸ்' திரைப்படத்தின் மூலம் அனைவருக்கும் பரீட்சையமானவர் நடிகர் கலையரசன். அதை தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்துள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'மெட்ராஸ்காரன்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து சிவராஜ் இயக்கத்தில் டிரெண்டிங் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 18ந் தேதி வெளியாக உள்ளது. அதே தேதியில் அறிமுக இயக்குனர் ஜானகி ராமன் இயக்கத்தில் கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள "டைட்டானிக்" படம் வெளியாக உள்ளது.

இந்த "டைட்டானிக்" படத்தில் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார், மேலும், ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.

ஒரே தேதியில் கலையரசனின் இரண்டு படங்கள் வெளியாவதால், இந்த இரண்டு படங்களின் மீதும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com