''தி ராஜாசாப்'' - இந்தி பாடலை ரீமிக்ஸ் செய்யும் திட்டம் கைவிடல்?


Remix plan dropped, Thaman to create a special song for Prabhas
x

'திகில் நகைச்சுவை' படமான இதற்கு 'தமன்' இசையமைக்கிறார்.

சென்னை,

பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளன. 'திகில் நகைச்சுவை' படமான இதற்கு 'தமன்' இசையமைக்கிறார்.

முன்னதாக தயாரிப்பாளர்கள் பிரபலமான இந்தி பாடல் ஒன்றை இப்படத்தில் ரீமிக்ஸ் செய்ய விரும்பி, அதற்காக உரிமைகளை வைத்திருக்கும் நிறுவனத்தை அணுகி இருக்கின்றனர். ஆனால், அந்த நிறுவனம் உரிமைகளுக்கு ரூ. 5 கோடி கேட்டிருக்கிறது. இதனால், அதிர்ச்சிக்குள்ளாக்கிய தயாரிப்பாளர்கள் தமனிடம் புது பாடலை உருவாக்க சொல்லியுள்ளனர்.

வரும் நாட்களில் அவர்கள் எந்த வகையான பாடலை உருவாக்குகிறார்கள் என்று பார்ப்போம். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

1 More update

Next Story