ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் கீர்த்தி சுரேஷின் ''ரிவால்வர் ரீட்டா''

''ரிவால்வர் ரீட்டா'' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது.
சென்னை,
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ''ரிவால்வர் ரீட்டா'' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு வீடியோ வெளியாகி இருக்கிறது. ''சரஸ்வதி சபதம்'' படத்தை இயக்கிய ஜே கே சந்துரு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இதில் கீர்த்தி சுரேஷுடன் ரெடின் கிங்ஸ்லி, ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
தமிழில் கீர்த்தி சுரேஷ் கடைசியாக நடித்த ''ரகு தாத்தா'' படம் சரியாக போகாததால், ''ரிவால்வர் ரீட்டா'' படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
Related Tags :
Next Story






