வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாகும் ருக்மினி வசந்த்


வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாகும் ருக்மினி வசந்த்
x

நடிகை ருக்மினி வசந்த் ‘நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

சென்னை,

‘காந்தாரா' படத்தைத் தொடர்ந்து, இந்திய அளவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியிருக்கிறார் ருக்மினி வசந்த். ராஷ்மிகா மந்தனாவைத் தொடர்ந்து ‘நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.

‘ஏஸ்', ‘மதராஸி' படங்களைத் தொடர்ந்து தற்போது தமிழில் அவர் புதிய படத்தில் நடிக்கப் போகிறாராம். லிங்குசாமி இயக்கத்தில் முன்னணி இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷவர்தன் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளாராம்.

இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் இலங்கையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. இதர நடிகர் - நடிகைகள் தேர்வு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ருக்மினி வசந்த்தை விட ஹர்ஷவர்தன் 3 வயது குறைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story