'பிரேமலு 2' அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்


Sachin and Reenu’s love story to take a new turn! Big update on Premalu 2
x
தினத்தந்தி 20 Jan 2025 2:41 PM IST (Updated: 20 Jan 2025 3:28 PM IST)
t-max-icont-min-icon

பிரேமலு 2 குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் திலீஸ் பகிர்ந்துள்ளார்

திருவனந்தபுரம்,

கடந்த ஆண்டு மிகப்பெரிய லாபம் ஈட்டிய படங்களில் ஒன்று பிரேமலு. உலகளவில் ரூ.136 கோடி வசூல் செய்தது. இந்த வசூல் பெரிதாக தெரியவில்லை என்றாலும், படத்தில் எந்த ஒரு நட்சத்திரங்களும் இல்லாமல், புதுமுகங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.

வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் அதன் பட்ஜெட்டை விட 45 மடங்கு அதிக லாபத்தை பெற்றது. கிரிஷ் ஏ.டி இயக்கிய இப்படத்தில் நஸ்லென் மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து, 2-ம் பாகத்தை படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், பிரேமலு 2 குறித்த அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் திலீஸ் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

'பிரேமலு 2 படத்திற்கான ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்துவிட்டன. படப்பிடிப்புக்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பை ஜூன் மாதத்தில் துவங்கி நான்கு கட்டங்களாக நடத்தவும் ஆண்டு இறுதியில் படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

1 More update

Next Story