சல்மான் கானின் "சிக்கந்தர்" புரோமோஷன் வீடியோ வெளியீடு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடித்துள்ள ‘சிக்கந்தர்’ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ் தீனா, ரமணா, ரஜினி, கத்தி, துப்பாக்கி என பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது பாலிவுட்டில் சல்மான்கானை வைத்து 'சிக்கந்தர்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரிக்கிறார்.
ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சுனில் ஷெட்டி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படம் வருகிற 30-ந் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு உலக அளவில் 'சிக்கந்தர்' படம் வெளியாக உள்ளது. படத்தின் டிரெய்லர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் புரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் சல்மான் கான், அமீர் கான் மற்றும் ஏ. ஆர் முருகதாஸ் இணைந்து கலந்துரையாடல் செய்து வீடியோ உருவாக்கியுள்ளனர். புரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் அமீர் கான் ஏ.ஆர் முருகதாஸை பார்த்து எங்கள் இருவரின் யார் உண்மையான சிக்கந்தர் என கேள்வி கேட்கிறார் அதற்கு பதி சொல்ல முடியாமல் ஏ.ஆர் முருகதாஸ் முழிக்கிறார். இதன் வீடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அமீர் கான் நடிப்பில் இந்தியில் கஜினி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்கியது குறிப்பிடத்தக்கது.






