புது காதலருடன் ஊர் சுற்றும் சமந்தா.. விரைவில் திருமணமா?

சமந்தாவும், இயக்குனர் ராஜ் நிடிமோருவும் தற்போது ஒன்றாகவே சுற்றி வருகிறார்கள்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. பல பிரச்சினைகளைத் தாண்டி மீண்டும் நடிக்க வந்திருக்கும் சமந்தா, இயக்குனர் ராஜ் நிடிமோருவுடன் நெருங்கிப் பழகி வருகிறார். ஆனாலும் காதல் என்பதை இருவரும் உறுதிப்படுத்தவே இல்லை. சமீபத்தில் கூட ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘இது புதிய தொடக்கம்' என்று சமந்தா சூசகமாக குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில் சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் தற்போது ஒன்றாகவே சுற்றி வருகிறார்கள். ஜிம், கோவில், ஷாப்பிங் என எங்கு பார்த்தாலும் இருவரும் கைகோர்த்தபடி நடமாடி வருகிறார்கள். இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாகவும் பேசப்படுகிறது. அதேவேளை ராஜ் நிடிமோருவின் முன்னாள் மனைவியும், எழுத்தாளருமான சியாமளி தி, சமூக வலைதளங்களில் சூசகமாக தெரிவித்து வரும் கண்டனங்களும் கவனம் ஈர்த்து வருகின்றன.
Related Tags :
Next Story






