’அதற்காகத்தான் ‘ஊ சொல்றியா’ பாடலில் நடித்தேன்’ - உண்மையை பகிர்ந்த சமந்தா

'ஊ சொல்றியா' பாடல் நடித்ததற்கான உண்மையான காரணத்தை சமந்தா வெளிப்படுத்தினார்.
சென்னை,
பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் ஒரு நிகழ்வில் புஷ்பா படத்தின் 'ஊ சொல்றியா' பாடல் குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார். 'ஊ சொல்றியா' பாடல் நாடு முழுவதும் எவ்வளவு வைரலாகியுள்ளது என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இந்நிலையில், 'ஊ சொல்றியா' பாடல் நடித்ததற்கான உண்மையான காரணத்தை சமந்தா வெளிப்படுத்தினார்.
அவர் கூறுகையில், ’நான் என்னை சோதித்துப் பார்க்கவே 'ஊ சொல்றியா' பாடலில் நடித்தேன். அது எனக்கு நானே கொடுத்த சவால்" என்று சமந்தா கூறினார்.
மேலும், "நான் என்னை ஒருபோதும் கவர்ச்சியாகக் கருதவில்லை. யாரும் எனக்கு ஒரு தைரியமான வேடத்தை கொடுக்கவில்லை. எனவே ஊ சொல்றியா பாடல் எனக்கும் என் கவர்ச்சிக்கும் ஒரு சுயபரிசோதனை போல இருந்தது," என்றார்.
Related Tags :
Next Story






