சமந்தா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்


Samantha Ruth Prabhus Maa Inti Bangaram Launched
x

சமந்தா நடிக்கும் `மா இன்டி பங்காரம்' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

சென்னை,

நட்சத்திர நடிகை சமந்தா கடைசியாக சுபம் படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் அவரது தயாரிப்பில் வெளிவந்த முதல் படமாகும்.

இருப்பினும், அவர் தயாரிப்பதாக அறிவித்த முதல் படம் மா இன்டி பங்காரம். கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது மீண்டும் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது.

மா இன்டி பங்காரம் படப்பிடிப்பு தற்போது துவங்கி இருக்கிறது. பூஜையுடன் இப்படப்பிடிப்பு துவங்கி இருக்கும்நிலையில், அது தொடர்பான வீடியோவை சமந்தா பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சமந்தா, குல்ஷன் தேவையா மூத்த நடிகை கவுதமி, மஞ்சுஷா மற்றும் திகந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

1 More update

Next Story