'அப்பா இறந்த நாளில் கூட...'இல்லை' என்று கூறி வருத்தப்படுத்த விரும்பவில்லை' - சமந்தா

ரசிகர்கள் புகைப்படம் எடுக்க அணுகும்போது ஒருபோதும் மறுப்பு தெரிவிக்காதது ஏன் என்பது பற்றி சமந்தா பேசினார்.
சென்னை,
நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில், ரசிகர்கள் தன்னிடம் புகைப்படம் எடுக்க அணுகும்போது ஒருபோதும் மறுப்பு தெரிவிக்காதது ஏன் என்பது பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், 'சமீபத்தில் என் அப்பா இறந்தார். அந்த சமயத்தில் மும்பையிலிருந்த நான் அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள சென்னைக்கு வந்தேன்.
அப்போது விமானநிலையத்தில் என்னிடம் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க அணுகினார்கள். புகைப்படம் எடுக்க வரும்போது நான் எந்த மனநிலையில் இருக்கிறேன் என்பது ரசிகர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். நான் 'இல்லை' என்று கூறி அவர்களை வருத்தப்படுத்த விரும்பவில்லை.
அந்த புகைப்படங்களுக்கெல்லாம் சிரித்து கொண்டே போஸ் கொடுத்தேன். அது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அப்பா இறந்த நாளில் தான் சிரிப்பதை எந்த ஒரு சாதாரண மனிதனும் எதிர்பார்க்க மாட்டான்" என்றார்.
Related Tags :
Next Story






